அஸ்ஹர் இப்றாஹிம்-
அகவை 36 இல் கால்பதித்துள்ள அம்பாறை மாவட்டத்தின் மூத்த விளையாட்டுக்கழகங்களுள் ஒன்றான சாய்ந்தமருது பிரேவ் லீடர்ஸ் விளையாட்டுக் கழகம் ( BLSC) ஒழுங்கு செய்திருந்த புனித இப்தார் நிகழ்வு இன்று (19) கழகத்தின் தலைவரும் மக்கள் வங்கியின் சிரேஸ்ட முகாமையாளருமான எம்.எஸ்.எம்.மஸுட் தலைமையில் மாளிகைக்காடு அல் ஹுஸைன் வித்தியாலய கேட்போர்கூடத்தில் இடம்பெற்றது.
ஸ்ரீலங்கா கிறிக்கட் கட்டுப்பாட்டு சபையின் அம்பாறை மாவட்ட பிரதிநிதி சிதத் உட்பட கழகத்தின் உயர்பீட உறுப்பினர்களும் ஏனைய உறுப்பினர்களும் இவ் இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டனர்.