உதய கம்மன்பிலவுக்கு ஜூலை 01ம் திகதி வரை விளக்கமறியல் - மோசடி

பொலிஸ் விஷேட விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில ஜூலை 01ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.  இன்று காலை கைது செய்யப்பட்ட உதய கம்மன்பில கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

நுகேகொட, பாகொட வீதியில் உள்ள அலுவலகத்தில் வைத்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கைது செய்யப்பட்டிருந்தார். 

அவுஸ்திரேலிய வர்த்தகரான ப்ரயன் செடிக் என்பவருக்கு சொந்தமான 110 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகள், போலி அட்டோனி அனுமதிப்பத்திரம் மூலம் உதய கம்மன்பிலவினால் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ப்ரயன் செடிக் என்பவரின் அட்டோனி அனுமதிப்பத்திர உரிமையாளரான லசித பெரேராவினால் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

குறித்த குற்றச்சாட்டில் உதய கம்மன்பில கைது செய்யப்பட்டதாக பொலிஸ் விஷேட விசாரணை பிரிவின் பணிப்பாளர் மெவன் சில்வா கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -