மஹிந்தவின் தோல்வி பற்றி திறந்த விவாதத்திற்கு வாரும் - சஜின் வாஸ்

பிவித்துரு ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் உதய கம்மன்பிலவை திறந்த விவாதத்திற்கு வருமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன சவால் விடுத்துள்ளார்.

கம்மன்பிலவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தோல்விக்கு யார் காரணம் என்பது தொடர்பில் விவாதத்திற்கு வருமாறே அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

அத்துடன் உதமய கம்மன்பில தனக்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பதிலளிப்பதற்கு தொலைக்காட்சி மூலமான விவாதமே சிறந்தது என சஜின் வாஸ் குணவர்தனவிற்கு தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தோல்விக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்தன மற்றும் முன்னாள் அமைச்சர் மேவின் சில்வா ஆகியோரின் சதி முயற்சியே காரணம் என உதய கம்மன்பில ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றில் குற்றம் சுமத்தியிருந்தார்.

எனினும் அந்த குற்றச்சாட்டை மேவின் சில்வா நிராகரித்திருந்த நிலையிலேயே உதய கம்மன்பிலவை திறந்த விவாதத்திற்கு வருமாறு சஜின் வாஸ் குணவர்தன சவால் விடுத்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -