ஜப்பான் சென்றடைந்தார் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் நஸீர்

மூத்த போராளி-

கிழக்கு மாகாண சுகாதார, சுதேச வைத்திய, சமூக நலன்புரிச் சேவைகள், சிறுவர் பாதுகாப்பு நன்னடத்தை அமைச்சர் ஏ.எல்.எம்.நசீர் அவர்கள் இன்று அதிகாலை ஜப்பான் நாட்டு விமான நிலையத்தை சென்றடைந்துள்ளார்.

ஜப்பான் நாட்டு அரசாங்கத்தின் அழைப்பையேற்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எ.எல்.எம்.நசீர் உட்பட அரச உயர்மட்ட தூதுக் குழுவினர் ஐந்து நாள் உத்தியோகபூர்வ விஜயமாக நேற்று மாலை ஜப்பான் நாட்டுக்கு பயனமாகியமை குறிப்பிடத்தக்கது. இவ்விஜயத்தின் போது ஜப்பான் நாட்டு பிரதமருடன் முக்கிய கலந்துரையாடலும் இடம்பெற உள்ளதுடன் மேலும் பல கருத்தரங்குகளிலும் அரச உயர்மட்ட தூதுக்குழு பங்குபெறவுள்ளது. 

மேலும் கிழக்கு மாகாண சுகாதாரத்துறையை மேம்படுத்துவது தொடர்பாக ஜப்பான் நாட்டு அரச பிரதிநிதிகளிடம் அமைச்சர் நசீர் அவர்கள் பல முக்கிய விடயங்கள் அடங்கிய முன்மொழிவுகளை சமர்ப்பிக்க உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -