திருகோணமலை: புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பொலிஸ் நிலையத்தை இடமாற்றவும் - விகாராதிபதி

அப்துல்சலாம் யாசீம்-
திருகோணமலை - மொறவெவ பகுதியில் மக்கள் நடமாட்டமில்லாத இடத்தில் அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் நிலையத்தை திரியாய் சந்திக்கு மாற்றுமாறு தெவனிபியவர விகாரையின் விகாராதிபதி உபரத்ன ஹிமி பொலிஸ் மா அதிபருக்கு கடிதமொன்றினை அனுப்ப நடவடிக்க எடுக்குமாறு சிவில் பாதுகாப்பு குழுக்கூட்டத்தில் வேண்டுகோள் விடுத்தார்.

புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள பொலிஸ் நிலையம் மக்கள் நடமாட்டம் இல்லாத இடமெனவும் காட்டு யானைகள் நடமாடும் இடமெனவும் தெரிவித்த விகாராதிபதி பொலிஸார் மக்கள் அதிகமாக வாழ்கின்ற இடத்திலேயே இருக்க வேண்டும். 

தற்போது அமைக்கப்பட்டுள்ள பொலிஸ் நிலையத்தை ஹொரவ்பொத்தான-திருகோணமலை பிரதான வீதியிலுள்ள திரியாய் சந்திக்கு கொண்டு செல்ல சிவில் பாதுகாப்பு குழுவின் ஊடாக பொலிஸ் மா அதிபருக்கு பொலிஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ள இடத்தினை பற்றி கடிதமொன்றினை அனுப்ப வேண்டுமெனவும் தெரிவித்தார்.

மொறவெவ பொலிஸ் பொறுப்பதிகாரி எச்.டி.என்.குலதுங்க தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலேயே இதனை தெரிவித்தார்.

இக்கூட்டத்தில் கிராம அபிவிருத்தி சங்கங்களின் முக்கியஸ்தர்கள்-மதப்பெரியார்கள்-கிராம உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -