வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கன்னத்தோட்டை...!

இக்பால் அலி-
சீரற்ற கால நிலை காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ருவன் வெல்ல கன்னத்தோட்டை மக்களுக்கு சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர் நிஹால் பாரூக் அவர்களின் தலைமையில் அவரது இல்லத்தில் வைத்து உணவுகள் சமைத்து வழங்கி வைக்கும் மனிதாபிமானப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.

யாப்பாவெல, கன்னத்தோட்டை, அங்குருவௌ, கொட்டியாகும்புர, யட்டியாந்தோட்டை, தள்துவ போன்ற இன்னும் பல இடங்கள் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன. 

இந்த சில இடங்களுக்கு உணவுப் பொதிகள் அனுப்ப முடியாதளவுக்கு சில முஸ்லிம் கிராமங்கள் உள்ளதாக மாகாண சபை உறுப்பினர் தெரிவிக்கின்றார்.

சுமார் 15000 பேர் அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை அமைச்சர் கபீர் ஹாசிம் மற்றும் தெல்தோட்டை ஹைரிய்யா நிறுவனம் ஆகியோர்களும் இணைந்து இந்தப் பகுதியில் உணவுப் பொதிகள் வழங்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

எவ்வாறாயினும் சப்ரகமுவ மாகாணம் மற்றும் கொழும்பு, கண்டி ஆகிய மாவட்டங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சமூக சேவை அமைப்புகளின் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்பது முக்கிய அம்சமாகும்.இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -