ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) யின் எட்டாவது தேசிய மாநாடு

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) யின் எட்டாவது தேசிய மாநாடு எதிர்வரும் 22ம் நாள் வவுனியாவில் இடம்பெறும்.

வவுனியா கோவில்குளம் உமாமகேஸ்வரன் சந்தியில் அமைந்துள்ள "ஆதி" திருமண மண்டபத்தில் இடம்பெறவுள்ள இவ் மாநாட்டில் கட்சியின் செயற்குழு உறுப்பினர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், அங்கத்தவர்கள் அனைவரும் தாயகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் இருந்து கலந்து கொள்ளவுள்ளதோடு, அமைப்பின் சர்வதேச கிளைகளின் பிரதிநிதிகளும் கலந்து கொள்ளவுள்ளனர். 

மாநாட்டில் தற்கால அரசியல் சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. அத்துடன் மாநாட்டினை நடாத்தி முடிக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

திரு க.சந்திரகுலசிங்கம் (மோகன்),
வவுனியா மாவட்ட இணைப்பாளர்,
ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி(புளொட்)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -