மலேசிய சர்வதேச பங்கோர் டயலொக் மாநாட்டுக்கு அமைச்சர் றிசாத்துக்கு அழைப்பு..!

னித சமுதாயத்தில் எதிர்நோக்கப்படும் சிக்கல்களுக்கும், பிரச்சினைகளுக்கும் முகம்கொடுத்து அவற்றை எவ்வாறு தீர்ப்பது? என்பது தொடர்பிலும், நிலைபேறான அபிவிருத்தி சம்பந்தமாகவும், மலேசியாவில் எதிர்வரும் செப்டம்பர் 05 – 07 வரை நடைபெறவுள்ள, பங்கோர் டயலொக் (Pangkor Dialogue) சர்வதேச மாநாட்டில், பிரதம விருந்தினராகப் பங்கேற்குமாறு கோரி, மலேசிய ஏற்பாட்டாளர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான றிசாத் பதியுதீனை சந்தித்து அழைப்பு விடுத்தனர். 

கைத்தொழில் வர்த்தக அமைச்சில் இன்று (11/05/2016) இடம்பெற்ற இந்த சந்திப்பில், மலேசிய - இலங்கை நட்புறவு, மலேசிய – இலங்கை வர்த்தகத் தொடர்புகளை மேம்படுத்தல் ஆகிய விடயங்களையும் அமைச்சர் றிசாத் பதியுதீனுடன் தூதுக்குழுவினர் பரிமாறிக்கொண்டனர். 


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -