கொழும்பு வெள்ள நிவாரண நடவடிக்கைகளை அமைச்சர் மனோ கணேசன் மேற்பார்வை..!

கொழும்பு பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுவின் தீர்மானத்தின்படி, பிரதேச செயலாளர் விக்கிரமசிங்கவின் மேற்பார்வையில் கொழும்பு நகர வெள்ள நிவாரண நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. வடக்கு மத்திய கொழும்பு நகரப்பகுதியில் 6,720 குடும்பங்களை சார்ந்த 32,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களுக்காக ஐந்து இடங்களில் உணவு சமைக்கப்பட்டு விநியோகிக்கப்படுகின்றன என்று கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கொழும்பு பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவருமான அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட இடங்களுக்கு நேரடியாக சென்று நிலைமைகளை அமைச்சர் மனோ கணேசன் பார்வையிட்டார். அமைச்சருடன் மேல்மாகாணசபை உறுப்பினர் கே. ரி. குருசாமி, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எஸ். ராஜேந்திரன், கொழும்பு மாநகரசபை உறுப்பினர்கள் லோரன்ஸ் பெர்னாண்டோ, மஞ்சுளா பெருமாள் ஆகியோரும் உடன் சென்றனர். 

இது தொடர்பில் அமைச்சர் மண் கணேசன் மேலும் கூறியதாவது,

பிரதேச செயலக நிவாரண நடவடிக்கைகளுக்கு மேலதிகமாக, இதற்கு மேலதிகமாக மேல்மாகாணசபை மூலமாகவும், கொழும்பு மாநகரசபை மூலமாகவும் பாதிக்கப்பட்டோருக்கு உதவிகள் வழங்கப்படுகின்றன. மேல்மாகாணசபையின் உதவிகள் மூலம் தண்ணீர், மருந்து வகைகள், பால், உடுப்பு போன்றவை வழங்கும் ஏற்பாடுகள், நேற்று பதில் முதல்வர் திலகசிறி தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக மேல்மாகாணசபை உறுப்பினர் கே. ரி. குருசாமி உறுதிபடுத்தி உள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொழும்பு பிரதேச செயலக பிரிவில் பாதிப்பட்டோர் விபரரங்கள்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -