கல்விமான் மர்ஹும் எஸ்.எச்.எம்.ஜெமீல் அவர்களின் நினைவுச் சொற்பொழிவும் நூல் வெளியீடும்..!

முனீரா அபூபக்கர்-
கல்விமான் மர்ஹும் எஸ்.எச்.எம். ஜெமீல் அவர்களின் நினைவுச் சொற்பொழிவும் அவரது சுவடி ஆற்றுப் படை பாகம் ஐந்து நூல் வெளியீடும் கொழும்பு தமிழ்ச் சங்கம் சங்கரப் பிள்ளை மண்பத்தில் 30/04/2016 அன்று வெகுவிமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்வுக்கு பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் தலைமை தாங்கினார்.

வரவேற்புரையை ஏ. பீர் முகம்மதும் ”இளம் வளர்ந்தோர் இலக்கியம்” என்ற தலைப்பில் பேராசிரியர சபா ஜெயராஜா அவர்களும் நினைவுப் பேருரை உரைத்தார்கள். அத்துடன் அறிமுக உரையை வைத்தியக் கலாநிதி தாஸிம் அகமது வழங்கினார். கலைவாதிக் கலீல் கவிதை வடிவில் இரங்கற்பாப் பொழிவும் ஆற்றியதோடு காத்தான்குடி பௌஸ் மௌலவியின் துஆப் பிரார்த்தனையும் நடைபெற்றது. 

நூற்றுக்கும் மேற்பட்ட கலை இலக்கிய ஆர்வலர்கள், மர்ஹும் எஸ்.எச்.எம். ஜெமீல் அவர்களின் உறவினர்கள் உட்பட பல கல்விமான்களும் கலந்து கொண்டு இவ்விழாவை சிறப்பித்தனர். அத்துடன் இந்த விழாவை பிரபல அறிவிப்பாளர் ஏ.ஆர்.எம். ஜிப்ரி அவர்கள் தொகுத்து வழங்கினார். நஸீல் ஜெமீல் அவர்களின் நன்றி உரையுடன் இந்நிகழ்வு இனிதே நிறைவடைந்நது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -