"என் மரணம் வரை நான் றிசாட் பதியுதீன் அமைச்சரை மறக்க மாட்டேன் -வாரியப்பொல ஆஷிக்கின் தந்தை

இப்னு ஜமால்-

"என் மரணம் வரை நான் றிசாட் பதியுதீன் அமைச்சரை மறக்க மாட்டேன் என வாழ்த்திய குருநாகல் "ஆஷிக்கின் தந்தை" தெரிவித்தார். குருநாகல் வாரியப்பொலையில் 2கோடி கப்பம் கேட்டு முஹம்மட் "ஆஷீக்" என்பவர் கடத்தப்பட்டமை யாவரும் அறிந்த விடயம்.

இந்த நிலையில் கடந்த 16ஆம் திகதி றிசாட் பதியுதீன் ஆஷிக்கின் வீட்டுக்கு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார். "அமைச்சர் ரிசாத் பதியுதீனைக் கண்ட ஆஷிக்கின் தந்தை "என் மரணம் வரை நான் றிசாட் பதியுதீன் அமைச்சரை மறக்க மாட்டேன்" என குறிப்பிட்டார். தனது மகனை விடுவிப்பதற்கு அமைச்சர் றிசாட் பதியுதீன் பொலிசாருடன் இணைந்து எடுத்த முயற்சிக்கு நன்றியும் தெரிவித்தார்.

கடத்தப்பட்ட ஆஷிக்கை அவருடைய வீடு சென்று அரவனைத்து,உரையாடி அவருக்கு உளவியல் ரீதியாக தெம்பளித்ததுடன் இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு பொலிசாருக்கும் அமைச்சர் அறிவுருத்தல் விடுத்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -