அட்டன் கல்வி வலயம் நடத்திய தமிழ் மொழித்தின போட்டியில் டிக்கோயா தமிழ் வித்தியாலம் தெரிவு

க.கிஷாந்தன்-

ட்டன் கல்வி வலயம் நடத்திய தமிழ் மொழித்தின போட்டியில் டிக்கோயா தமிழ் வித்தியாலதிருந்து மூன்று நிகழ்ச்சிகள் மாவட்ட மட்டதிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக கல்லூரியின் அதிபர் ஏ.ஜே.நிகலஸ் தெரிவித்தார்.

தமிழ் மொழித்தினத்தினையொட்டி அட்டன் கல்வி வலயம் நடத்திய தமிழ் தின போட்டியில் கடந்த சில தினங்களாக புளியாவத்தை தமிழ் மகா வித்தியாலயம், அட்டன் ஹைலன்ஸ் கல்லூரி மற்றும் புனித ஜோன் பொஸ்கோ ஆகிய கல்லூரிகளில் போட்டிகள் நடைபெற்றன.

இப்பாடசாலையில் நடைபெற்ற போட்டிகளில் சிறுகதை, போட்டியில் செ.சரமிளா என்ற மாணவி முதல் இடத்தினையும், இலக்கணம் போட்டியில் செ.ஸ்ரீதேவிகா என்ற மாணவியும் தமிழறிவு போட்டியில் பி.சுசந்திகா, செசரண்யா, ம.நிஸாந்தினி, யோ.ரம்யலதா, செ.ஸ்ரீதேவிகா ஆகிய மாணவிகள் முதலாம் இடங்களை பெற்று மாகாண மட்ட போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -