இரண்டு முக்கிய பிரிவுகள் பசில் ராஜபக்ச வசம் - அதிர்ச்சியில் மஹிந்த அணி

விமல் வீரவன்ச மற்றும் உதயகம்மன்பிலவின் கீழ் செயற்பட்ட கூட்டு எதிர்க்கட்சியின் ஊடக பிரிவு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உத்தரவிற்கமைய உடன் அமுலுக்கு வரும் வகையில் பசில் ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் உள் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

அத்துடன் இதுவரையில் கூட்டு எதிர்க்கட்சிக்காக செயற்படுகின்ற விமல் வீரவனசவின் இணையத்தளத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கும், கோத்தபாய ராஜபக்ச மற்றும் தனக்கு அவசியமான முழுமையான பிரச்சாரத்தை வழங்குமாறு நாமலினால் விமல் வீரவன்சவிடம் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊடக பிரிவில் நூற்றுக்கு 90 வீதமான அதிகாரம் ராஜபக்சர்களிடமே உள்ளது.

பசில் ராஜபக்சவின் திட்டம் மற்றும் முதலீடுகளுக்கமைய ஊடகபிரிவிற்காக வார இறுதி பத்திரிகை ஒன்று வெளியிடப்படவுள்ளது. எதிர்வரும் வாரம் “இரிதா என்ற பெயரில் இந்த பத்திரிகை சந்தைக்கு வரவுள்ளது.

அதற்கமைய விமல், கம்மன்பில, மற்றும் வாசுதேவ நாணயக்கார போன்றோர் தப்பி கொள்வதற்காக கட்டியெழுப்பப்பட்ட கூட்டு எதிர்கட்சியின் அமைப்பாளர் பிரிவு, ஊடக பிரிவு ஆகிய, இரண்டு முக்கிய பிரிவுகள் பசில் ராஜபக்சவிடம் ஒப்படைக்கப்படவுள்ளது.dc
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -