அய்ஷத் ஸெய்னி-
பாலமுனை மின்ஹாஜ் மகா வித்தியாலயத்திற்கு இன்று (2016.04.18) கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆரிப் சம்சுடீன் அவர்கள் விஜயமொன்றை மேற்கொண்டு தன்னால் 2015 ஆம் ஆண்டின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின்கீழ் பாலமுனை மின்ஹாஜ் மகாவித்தியாலய தரம் 6, 7 வகுப்பறைகளின் நிலத்தை கொங்ரீட் இட்டு செப்பனிட வழங்கப்பட்ட ரூபா.100000.00 நிதியின் மூலம் செப்பனிடப்பட்ட வகுப்பறைகளை பார்வையிட்டார்.
குறித்த நிதி 1200 சதுர அடி நிலப்பரப்பை செப்பனிட வழங்கப்பட்ட போதிலும் பாடசாலை நிர்வாகம் 2500 சதுர அடி நிலப்பரப்பை செப்பனிட்டுள்ளமைக்காக பாடசாலை அதிபர் எஸ்.எம்.எம்.ஹனிபா BA JP யிடம் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
மேலும் பாடசாலை அதிபரால் மாகண சபை உறுப்பினருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டதுடன் பாடசாலையின் குறைபாடுகளும் சுட்டிக்காட்டப்பட்டது.


