பழனி திகாம்பரத்தின் ஆலோசனைக்கு அமைய சித்திரை புத்தாண்டு விளையாட்டு வைபவம்

மலர்ந்துள்ள துர்முகி வருடத்தை முன்னிட்டு மலைநாட்டு புதிய கிராமங்கள்> உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் கெளரவ பழனி திகாம்பரம் அவர்களின் ஆலோசனைக்கு அமைய மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் நலன்புரி சங்கத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட சித்திரை புத்தாண்டு விளையாட்டு வைபவமானது நேற்று கொழும்பு 05 இல் அமைந்துள்ள ஹென்றி பெட்றிஸ் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. 

இவ் சித்திரை புத்தாண்டு விளையாட்டு வைபவத்தில் மலைநாட்டு புதிய கிராமங்கள்> உட்கடடமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் அனைத்து உத்தியோகஸ்தர்கள் மற்றும் ஊழியர்களோடு இவ் அமைச்சின் கீழ் இயங்கும் செளமியமூர்;த்தி தொண்டமான் ஞாபகார்த்த மன்றம் மற்றும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் உத்தியோகஸ்தர்கள் மற்றும் ஊழியர்களும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


மேலும் சித்திரை புத்தாண்டு விளையாட்டு வைபவத்தில் யானைக்கு கண் வைத்தல்> சட்டி உடைத்தல்> பலூன் உடைத்தல்> பனிஸ் உண்ணுதல்> தொப்பி மாற்றுதல்> சங்கீத கதிரை> கயிர் இழுத்தல்> தலையணை சண்டை> ஓட்டபந்தயம் உட்பட சிறியோர் பெரியோர்கான பல பாரம்பரிய விளையாட்டு போட்டிகள் இடம்பெற்றதோடு வெற்றி பெற்றோர்க்கு பெறுமதியான பரிசில்கள் வழங்கப்பட்டன. இந் நிகழ்வில் அவுறுது குமாரி தேரந்தேடுக்கும் போட்டியில் செல்வி. ஆயி~h சப்ரின் மற்றும் அவுறுது குமாரன் தேரந்தேடுக்கும் போட்டியில் திரு. அருண ரட்ணாயக்க ஆகியோர் வெற்றிபெற்றனர். 

இவ் சித்திரை புத்தாண்டு விளையாட்டு வைபவத்தில் நுவரெலிய பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ் அவர்கள் அமைச்சின் செயலாளர் திருமதி. ரஞ்சனி நடராஜபிள்ளை மற்றும் பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் தலைவர் வீ புத்திரசிகாமணி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -