மகளை துஷ்பிரயோகம் செய்தவரை காத்திருந்து கையை வெட்டிய தந்தை...!

னது மகளை துஷ்பிரயோகம் செய்த தாக கூறப்படும் நபரின் கைகளை தந்தையொருவர் வெட்டி வீசிய சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இந்தியாவின் பஞ்சாப்பில் , பதிந்தா நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

17 வயது இளைஞன் ஒருவரின் கைகளே இவ்வாறு வெட்டப்பட்டுள்ளன.

கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் , குறித்த இளைஞன் 7 மாத குழந்தையொன்றை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பான வழக்கு பதிந்தாவில் தற்போது நடந்து வரும் நிலையில், பாதிக்கப்பட்ட குழந்தையின் தந்தையும் , குறித்த இளைஞனும் வழக்குக்காக நீதிமன்றம் வந்துள்ளனர்.

இதன்பின்னர் , குழந்தையின் தந்தையான பம்மா சிங் என்ற நபர் , குறித்த இளைஞனை பேசி சமாதனப்படுத்தி தன்னுடன் மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றுள்ளார்.  பின்னர் ஒரு இடத்தில் அவரை மோட்டார் சைக்கிளில் இருந்து இறக்கி , மரத்தில் கட்டி வைத்து கூரிய ஆயுதத்தால் தாக்கி கைகளை வெட்டியுள்ளார்.

கைகள் வெட்டப்பட்ட நிலையில் துடித்துக்கொண்டிருந்த நபரை கிராமவாசிகள் வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். சந்தேகநபரான பம்மா சிங் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -