“பஞ்சம் பிழைக்க வந்த சீமை” என்ற நூல் வெளியீட்டு விழா...!

க.கிஷாந்தன்-
லையக மூத்த எழுத்தாளர் கலாபூஷணம் மு.சிவலிங்கம் எழுதிய “பஞ்சம் பிழைக்க வந்த சீமை” என்ற நூல் வெளியீட்டு விழா 10.04.2016 ஞாயிற்றுகிழமை வட்டவளை அகரவத்தை மீனாட்சி தோட்ட எல்லை முனியான்டி கோயில் முன்றலில் நடைபெற்றது.

மீனாட்சி தோட்டத் தொழிலாளியான திருமதி.இராஜேஸ்வரி மகேஸ்வரன் தலைமையில், மலையக அரசியல் விழிப்புணர்வு கழகம் மற்றும் மலையக கலை, பண்பாட்டு, மன்றமும் ஏற்பாடு செய்த இந் நிகழ்வில் பிரதம அதிதியாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ், மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் ஏ.லோறண்ஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மேற்படி நிகழ்வில் வரவேற்புரையை புவனேஸ்வரனும், நூல் அறிமுகவுரையை ஜீவன் ராஜேந்திரனும் நிகழ்த்தினர். .

நூலின் ஆய்வுரையை சூரியகாந்தி பத்திரிகையின் ஆசிரியர் சிவலிங்கம் சிவகுமாரன் மற்றும் பேராசிரியர் சே.யோகராசா ஆகியோரும் கருத்துரையை ஓய்வுபெற்ற தொழிலாளி வீ.பரமசிவமும், ஏற்புரையை நூலாசிரியரும் நிகழ்த்தியமை குறிப்பிடதக்கது.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -