வசீம் தாஜுதீனின் படுகொலை தொடர்பில் கைதான பொலிஸ் அதிகாரிக்கு நீதிபதியின் அதிரடி தீர்ப்பு..!

பிர­பல ரக்பி வீரர் வஸீம் தாஜு­தீனின் படு­கொலை விவ­கா­ரத்தில் சாட்­சி­களை மறைத்­தமை தொடர்பில் கைதான முன்னாள் நார­ஹேன்­பிட்டி குற்­ற­வியல் பிரிவின் பொறுப்­ப­தி­காரி மீதான வழக்கு விசா­ரணை நேற்று புதுக்­கடை நீதிவான் நீதி­மன்ற வளா­கத்தின் பொலிஸ் காவ­ல­ர­ணி­லேயே இடம்­பெற்­றது.

நேற்று போயா விடு­முறை என்­பதால் புதுக்­கடை நீதிவான் நீதி­மன்ற வளா­கத்தில் வழக்கு விசா­ர­ணைக்கு என 9 ஆம் இலக்க நீதிவான் நீதி­மன்ற நீதி­பதி திலிண கமகே கட­மையில் இருந்தார்.

இந்­நி­லையில் நேற்று முன்­தினம் வஸீம் தாஜுதீன் விவ­கா­ரத்தில் கைது செய்­யப்­பட்ட பொலிஸ் பரி­சோ­தகர் சுமித் சம்­பிக்க பெரே­ராவை நேற்று மன்றில் ஆஜர் செய்­வ­தாக இருந்­தது.

இது தொடர்பில் நீதிவான் திலின கம­கே­வுக்கும் அறி­விக்­கப்­பட்­டி­ருந்த நிலையில் காலை முதல் பி.ப. 3.00 மணி­வரை அவரும் தனது 9 ஆம் இலக்க நீதி­மன்றில் இருந்தார். 

எனினும் சந்­தேக நபர் அழைத்து வரப்­ப­டாத நிலையில் 3.00 மணிக்கு கட­மையை நிறைவு செய்த நீதிவான் நீதி­மன்­றி­லி­ருந்து செல்ல தனது காரில் பய­ணத்தை ஆரம்­பித்தார்.

இதன்­போதே சந்­தேக நப­ரான பொலிஸ் பரி­சோ­தகர் சுமித் சம்­பிக்க பெரே­ராவை புல­னாய்வுப் பிரி­வினர் நீதி­மன்­றுக்கு அழைத்து வந்து பொலிஸ் காவ­ல­ரணில் வைத்­தி­ருந்­தனர். 

நீதிவான் தான் செல்லும் போது இதனை அவ­தா­னித்து உட­ன­டி­யாக நீதி­மன்ற வாயிலில் காரை நிறுத்­தி­விட்டு பொலிஸ் காவ­ல­ர­ணுக்குள் சென்று வழக்கை விசா­ர­ணைக்கு எடுத்தார்.

"ஏன் இப்­படி அலைக்­க­ழிக்­கி­றீர்கள் இன்று விடு­முறை நாள். நாமும் கட­மையை தானே செய்­கிறோம். பி.ப. 2.00 மணிக்கு வரு­வ­தாகக் கூறி­னீர்கள். பின்னர் பி.ப. 2.15 என்­றீர்கள். பி.ப. 2.30 வரு­கிறோம் என்­றீர்கள். 5 நிமி­டங்­களில் வரு­வ­தாகக் கூறி­னீர்கள். வரவே இல்லை. இப்­போது வந்து நிற்­கி­றீர்கள்” என குற்றப் புல­னாய்வுப் பிரிவின் அதி­கா­ரி­களை பார்த்து கூறியவாறே வழக்கை விசா­ர­ணைக்கு எடுத்தார். 

இதன்­போது பொலிஸ் காவ­ல­ரணில் தொலைக்காட்சி செயலில் இருந்ததுடன் அதில் நிகழ்ச்சி ஒன்றும் ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது. விசாரணையின் இடை நடுவிலேயே தொலைக்காட்சியும் நிறுத்தப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -