பாக்கு நீரிணையில் தலைமன்னாருக்கும் இராமேஸ்வரத்துக்கும் இடையில் பாலம் அமைக்கும் திட்டத்தில், இந்திய மத்திய அரசாங்கம் உறுதியாக இருப்பதாக, வீதிப் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், கப்பல்துறை மத்திய இணை அமைச்சர் பொன்.இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டம் இப்போது ஆரம்பக்கட்டத்தில் இருக்கிறது. மகாகவி பாரதியாரின் கனவை நிறைவேற்றும், இந்த திட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில், இந்திய மத்திய அரசாங்கம் உறுதியாக இருக்கிறது.
இந்த திட்டத்தில் இலங்கை அரசாங்கமும் இணைந்து கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.