மருதம் கலைக்கூடலின் கௌரவிப்பு விழா - அமைச்சர் ஹலீம் பிரதம அதிதி

ருதம் கலைக்கூடல் மன்றம் ஏற்பாடு செய்துள்ள கௌரவிப்பு விழா நாளை மறுதினம் சனிக்கிழமை (23) பிற்பகல் 4.00 மணி தொடக்கம் சாய்ந்தமருது பரடைஸ் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

மன்றத்தின் தலைவரும் முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால் சேவைகள் அமைச்சின் இணைப்பாளருமான அஸ்வான் சக்காப் மௌலானா தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் முஸ்லிம் சமய விவகார மற்றும் தபால் சேவைகள் அமைச்சர் அல்ஹாஜ் எம்.எச்.ஏ ஹலீம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பிக்கவுள்ளார்.

அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ருப், முஸ்லிம் சமய, பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் எம்.எச்.எம்.சமீல், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம், கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ ஜலீல் உள்ளிட்டோர் கௌரவ அதிதிகளாக கலந்து கொள்ளவிருக்கின்றனர்.

இதன்போது ஓய்வுபெற்ற கோட்டக் கல்விப் பணிப்பாளர் எம்.ஐ.ஏ.ஜப்பார், கல்முனை உதவிப் பொலிஸ் பொறுப்பதிகாரி எஸ்.எல்.சம்சுதீன், ஊடகவியலாளர்களான ஏ.எல்.ஜுனைதீன், ஏ.எல்.எம்.முக்தார், பி.எம்.எம்.ஏ.காதர், ஏ.அஸ்ஹர், எம்.வை.அமீர் மற்றும் பாத்திமா சஜ்னாஸ் ஆகியோர் பாராட்டி கௌரவிக்கப்படவுள்ளனர் என மன்றத்தின் இணைச் செயலாளர் எஸ்.எல்.றியாஸ் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -