கலைமகன் பைரூஸ்-
வெலிகம பிரதேசத்தில் உள்ள வர்த்தக நிலையமொன்று இன்று (15) மாலை ஏற்பட்ட தீ விபத்தில் தீக்கிரையாகியுள்ளது.
வெலிகம கடற்கரையை அண்மித்ததாய் அமைந்துள்ள டயலொக் நிறுவனத்திற்குப் அருகிலுள்ள ஸதர்ன் லெதர் ஷொப் எனும் குறித்த வர்த்தக நிலையமே இவ்வாறு முற்றாகச் சேதமடைந்துள்ளது.
வெலிகம பிரதேசத்தைச் சேர்ந்த சிங்கள, முஸ்லிம்கள் மக்கள் உடனடியாக சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு விரைந்து தீயை அணைப்பதற்கு ஆவன செய்தனர்.
தீப்பரவலுக்கான காரணம் இது வரையில் கண்டறியப்படவில்லை. வெலிகம பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவித்தனர்.

