கேரளாவில் உள்ள கோவில் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 102 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். கேரள மாநிலம் கொல்லம் அருகே உள்ளது பரவூர் புட்டிங்கல் தேவி கோவில். இங்கு ஆண்டுதோறும் நடக்கும் திருவிழாவில் பட்டாசுகள் வெடித்துக் கொண்டாடுவது வழக்கம். அதற்காக, பட்டாசுகள் வாங்கி இருப்பு வைப்பதும் வழக்கம். அவ்வாறு இருப்பு வைக்கப்பட்டிருந்த வெடிபொருள் கிடங்கில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 3.30 மணியளவில் திடீரென தீப்பற்றியது.
அதையடுத்து, அங்கிருந்த வெடிபொருள்கள் முற்றிலுமாக வெடித்துச் சிதறின. வெடி விபத்தில் ஏற்பட்ட பயங்கர தீயில் சிக்கி 102 பேர் உயிரிழந்தனர். 350-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர்.
கோவில்களில் பட்டாசு வெடித்து விழாக்களைக் கொண்டாட மாவட்ட மட்டத்தில் தடை உள்ளது என்றாலும் வெடிவிடிக்க தற்காலிக அனுமதி வழங்கப்படுவது வழக்கம். ஏப்ரல் 9-ம் திகதியன்று பட்டாசு வெடிக்க மாவட்ட ஆட்சியர் அனுமதி மறுத்தார். ஆனால் இது வெறும் பட்டாசு வெடித்து கொண்டாடுவது மட்டுமல்ல பட்டாசு வெடிப்பதில் பந்தய போட்டிகள் நடைபெறுவதாகும் என்று கலெக்டர் அனுமதி மறுத்திருந்தார்.
எனவே உத்தரவை மீறி செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை பாயும் என்று கலெக்டர் எச்சரித்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புப் படையினர், தீயை அணைக்கும் பணியிலும், தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டனர்.
காயமடைந்தவர்கள் அனைவரும் கொல்லம் மற்றும் திருவனந்தபுரத்திலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த பயங்கர வெடி விபத்தில் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோரும் பக்தர்கள் ஆவர்.
இந்த வெடி விபத்து ஏற்பட்ட கிடங்குக்கு அருகில் இருந்த திருவாங்கூர் தேவஸ்தான வாரியத்தின் கட்டிடம் ஒன்று முற்றிலும் வெடித்துச் சிதறியது. கட்டிட இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, தேர்தல் ஆணையம் தனது கட்டுப்பாடுகளை முற்றிலுமாக தளர்த்தியுள்ளது.
கேரள அரசுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் செய்யப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
இந்த பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.
சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புப் படையினர், தீயை அணைக்கும் பணியிலும், தீயில் சிக்கியவர்களை மீட்கும் பணியிலும் ஈடுபட்டுள்ளனர்.
கேரள முதல்வர் உம்மன் சாண்டியும் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து பார்வையிட்டார். மேலும், விபத்து நடந்தது குறித்து உரிய விசாரணை நடத்தவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.
தீ விபத்து நடந்த கொல்லம் கோவில் நிர்வாகத்தினர் மீது கேரள காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக, தேர்தல் ஆணையம் தனது கட்டுப்பாடுகளை முற்றிலுமாக தளர்த்தியுள்ளது.
மேலும், கேரள அரசுக்கு தேவையான உதவிகள் அனைத்தும் செய்யப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார். கொல்லம் கோவிலில் நடந்த தீ விபத்தில் சிக்கி பலியானோர் குடும்பத்துக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி உள்ளிட்ட பல்வேறு தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
வெடிவிபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50,000 தொகையும் பிரதமர் நிவாரணத் தொகையாக வழங்கப்படுகிறது.
பிரதமர் மோடி கேரளாவிற்கு விரைவில் செல்ல உள்ளார். கேரளாவில் நடக்கவிருந்த பாஜக-வின் அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.பிரதமர் மோடி தீக்காயத்திற்கு சிகிச்சை அளிக்கும் நிபுணர்கள் குழுவுடன் டெல்லியில் இருந்து விமானத்தில் புறப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இந்திய கப்பல் படை மற்றும் விமானப் படையினர் நிவாரணப் பொருட்களை 4 ஹெலிகாப்டரில் கொல்லத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது கேரள முதல்வர் உம்மண் சண்டி அமைச்சர்களுடன் அவசர ஆலோசனை நடத்தி வருகிறார்.