திருகோணமலை தரிசிநிலங்களில் அபிவிருத்தி தொடர்பான ஆராய்வு..!

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் விசேட கலந்துரையாடல் ஓன்று இடம் பெற்றது. இக்கலந்துரையாடல் மாவட்ட அரசாங்க அதிபர் என்.எ.எ.புஸ்பகுமாரவின் ஏற்பாடுக்கு அமைவாக கிழக்குமாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்ட்டின் தலைமயில் இடம் பெற்றது. 

இக்கலந்துரையாடலின் போது திருகோணமலையில் பயன்படுத்தப்படாத தரிசிநிலங்களில் எவ்வாறான அபிவிருத்தித்திட்டங்களைமேற்கொள்ள முடியும் என்பது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது .

அத்துடன் கடந்த ஜனவரி மாதம் இடம் பெற்ற முதலீட்டாளர் மாநாட்டினை தொடர்ந்து கிழக்குக்கு அதிக முதலீடுகளை மேற்கொள்ள உள்ளதாகவும் அதற்கான வழங்களை இனங்கண்டு முதலீட்டலர்களுக்கு தேவையான புதிய திட்டங்களை வழங்க உள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார் .

மேலும் இத்திட்டத்தின் மூலம் வேலையில்லாப் பிரச்சினைக்கான தீர்வினை பெற்றுக்கொடுத்து இம்மாகாணத்தினை வளமிக்க செழிப்பான அபிவிருத்தி அடைந்த மாகாணமாக மாற்றுவதே இதன் நோக்கமாக உள்ளதாக கிழக்குமாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட் தெரிவித்தார் .

இக்கலந்துரையாடலுக்கு திருகோணமலை மாவட்டத்தின் பதினொரு பிரதேச செயலக செயலாளர்களும் களந்து கொண்டனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -