பொத்துவில்: பேஸ்புக்கில் அவதூறாக செய்தி வெளியிட்ட நபர் விளக்கமறியலில்..!

ம்பாறை பொத்துவில் பிரதேசத்தில் பெண் ஒருவரை அவதூறாக முகநூலில் செய்தி வெளியிட்ட குற்றச்சாட்டில் கைதான நபரின் பிணை மனுவை பொத்துவில் நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.ஐ.வஹாப்தீன் நிராகரித்துள்ளார்.

கடந்த மாதம் 28ம் திகதி குறித்த நபர் பெண் ஒருவர் மீது அவதூறாக குற்றம் சுமத்தி தனது முகநூலில் செய்தி வெளியிட்டிருந்தார்.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் பொலிஸில் செய்த முறைப்பாட்டையடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நபரின் சார்பாக அவரது சட்டத்திரணி ஊடாக பிணை மனு நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த வேளையில் நேற்று (15) இதனை நிராகரித்த நீதவான் குறித்த நபரை எதிர்வரும் 29ம் திகதி வரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -