திடீர் மின் தடைகளுக்கு பிரதமர் கண்டிப்பான வேண்டுகோள்..!

திர்காலத்தில் திடீர் மின் தடைகளுக்கு ஒரு போதும் இடமளிக்கக் கூடாதென இலங்கை மின்சார சபை உயர் மட்ட அதிகாரிகளுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆலோசனை வழங்கியுள்ளார்.

இவ்வாறு நாட்டில் தொடர்ந்தும் திடீரென மின்சாரம் தடைப்படுமாக இருந்தால், மின்சார சபையினால் அல்லது மின்சக்தி அமைச்சினால் வழங்கப்படும் சேவை தொடர்பில் பாரிய சிக்கல் தன்மை ஏற்படும் எனவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறித்த அதிகாரிகளிடம் நேற்று குறிப்பிட்டுள்ளார்.

திடீர் மின் தடையினால் நுகர்வோர் பாதிப்படைவது மட்டுமல்ல, பொது மக்களின் நாளாந்த வாழ்க்கை, தேசிய பொருளாதாரம் என்பனவும் அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகின்றன.

நல்லாட்சி அரசாங்கம் மக்களுக்கு அழுத்தங்களைக் கொடுக்காமல், சலுகைகளை வழங்கவே விரும்புகின்றது. இதனால், இந்த மின்சார அசௌகரியங்களை மக்களுக்கு வழங்குவதிலிருந்து தவிர்ந்து கொள்ள வேண்டும் எனவும் பிரதமர் அறிவித்ததாக மின்சார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -