மாகாண சபை உறுப்பினர் அன்வரினால் புல்மோட்டை மீனவர்களின் பிரச்சினைக்குத் தீர்வு..!

எம்.ரீ. ஹைதர் அலி-
டந்த 7 நாட்களாக புல்மோட்டை பிரதேசத்தில் வெளி மாவட்ட மீனவர்கள் தமது பிரதேசங்களுக்கு வருகை தருவதால் அன்றாட மீனவ தொழிலுக்கு அசௌகரியங்கள் ஏற்படுவதாக அவர்களின் வருகையை கண்டித்து திருகோணமலை புல்மோட்டை சந்தியில் மீனவர்கள் கவனயீர்ப்பு போராட்டங்களை நடந்தி வந்தனர்.

இது விடயமாக கடந்த 2016.02.18ஆந்திகதி கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் அவர்களால் குச்சவெலி பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டத்தில் மீனவர்களின் பிரச்சினை முன் வைக்கப்பட்டு இறுதி தீர்மானமாக எதிர்வரும் 2016.02.29ஆந்திகதி நடைபெறவுள்ள திருமலை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என பிரதேச செயலக அபிவிருத்தி குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. 

இதற்கமைவாக 2016.02.18ஆந்திகதி பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம் 2016.02.29ஆந்திகதி நடைபெற்ற திருமலை மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் முன்வைக்கபட்டது.

பின்னர் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், எதிர்க்கட்சி தலைவரும் மற்றும் மாவட்ட அபிவிருத்தி குழு இணைத் தலைவருமான கௌரவ இரா. சம்பந்தன் அவர்கள், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். தௌபீக், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் தண்டாயுதபாணி மற்றும் மாகாண சபை உறுப்பினர்களான ஜனார்த்தனன், லாகிர் ஆகியோர் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம். அன்வர் அவர்களுக்கு ஆதரவு வழங்கினர்.

சபையில் குறித்த மாவட்டத்தில் உள்ள மீனவர்களுக்கு அசௌகரியங்கள் ஏற்படுவதுடன் கடந்த காலங்களில் பல எதிர்ப்பு ஆர்பாட்டங்கள் வீதிகளிலும் இடம் பெருவதனாளும் பிரதேசத்தில் குழப்பங்கள் ஏற்படுவதாலும் இந்த மாவட்டத்தின் மீனவர்கள் அமைதியான முறையில் தமது கடற்றொழிலை நடாத்தி செல்வதற்கு 2016.02.29ஆந்திகதி நடைபெற்ற மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் வெளி மாவட்ட மீனவர்களின் வரவை நிறுத்துமாறு கூட்டத்தில் தீர்மானம் மேற்கொள்ளபட்டதுடன், அரசாங்க அதிபரினால் போலீசாருக்கும் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளுக்கும் மற்றும் பிரதேச செயலாளருக்கும் அறிவுறுத்தல் வழங்கபட்டது.

அதனை அடுத்து தொடர்ந்து கடைபிடித்து வந்த புல்மோட்டை மீனவர்கள் போராட்டம் புல்மோட்டை பிரதேசத்தில் முடிவுக்கு கொண்டுவரபட்டது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -