சிங்கராஜ வனாந்திரப் பகுதியில் அடையாளம் தெரியாத விலங்கு ஒன்று இனங்காணப்பட்டுள்ளது.
வனப் பகுதியின் வெத்தாகல மற்றும் பொதுபிடியவுக்கு இடையிலுள்ள பனபொல கோஸ்குலன பிரதேசத்தில் இந்த விலங்கு காணப்பட்டுள்ளது.
வால் இன்றி மஞ்சள், கருப்பு, பழுப்பு நிற ரோமங்களுடனுள்ள அந்த விலங்கு 3 கிலோ 300 கிராமளவிலான நிறையுடையது எனவும் 60 சென்றிமீற்றர் வரையான நீளமுடையது எனவும் வனஜீவராசிகள் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்திற்கு தொடர்பு கொள்றுமாறு கோரப்பட்டுள்ளது.

