மன்னார் பிரதீப் எழுதிய இரவல் தேசம் கவிதை நூல் வெளியீடு












செட்டிகுளம் சர்ஜான்-

மன்னார் தமிழ்ச்சங்கத்தின் வெளியீடான கவிஞர் ந.பிரதீப் எழுதிய இரவல் தேசம் கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்று பிரம்மஸ்ரீ மஹாதர்மகுமார சர்மா குருக்கள் தலைமையில் மன்னார் ஜூலி ஹோட்டலில் நடைபெற்றது.

விருந்தினர்கள் வரவேற்புடன் மங்கள விளக்கேற்றல் தமிழ்தாய்வாழ்த்து இசைக்கப்பட்டு நிகழ்வு ஆரம்பமானதுடன் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

குறித்த நூலினை பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் வெளியிட்டு வைத்ததுடன் விருந்தினர்கள் உறையும் இடம்பெற்றன.

நூலாய்வினை கவிஞர்.வே.முல்லைத்தீபன் வழங்கியதுடன் ஏற்புரையில் கவிஞர் தான் கடந்து வந்த பாதையின் வலிகளை தெளிவுபடுத்தியதுடன் அனைவருக்கும் தனது இதயபூர்வமான நன்றியையும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக பாராளுமன்ற உறுப்பினர் இ.சாள்ஸ் நிர்மலநாதன் கலந்துகொண்டதுடன் விசேட விருந்தினராக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.ஏ.ஸ்ரான்லி டி மெல் ,சிறப்பு விருந்தினர்களாக மன்னார் மாவட்டபிரதேச செயலாளர் கே.எஸ்.வசந்த குமார் இயக்குநர் கலையருவி அருட்பணி தமிழ் நேசன் அடிகளார், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் வினோ.நோகராதலிங்கம் கௌரவ விருந்தினர்களாக வைத்தியகலாநிதி.எஸ்.செல்வமகேந்திரன், வைத்தியகலாநிதி.செ.லோகநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

குறித்த நிகழ்வில் கிளிநொச்சி-முல்லைத்தீவு-அம்பாறை-திருகோணமலை-மட்டக்களப்பு-போன்ற மாவட்டங்களில் இருந்து கவிஞர்கள் கலைஞர்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -