இரண்டரை இலட்சம் பணத்துடன் ரொட்டி மேக்கர் தலைமறைவு...!

எப்.முபாரக்-
திருகோணமலை, டொக்கியாத் வீதியிலுள்ள ஹோட்டலொன்றில் ரொட்டி மேக்கராக பணியாற்றிய 28 வயது மதிக்கத்தக்க இளைஞன் ஒருவர், சனிக்கிழமை (02) இரண்டரை இலட்சம் ரூபாய் பணத்தையும் கைத்தொலைபேசியையும் திருடிக்கொண்டு தலைமறைவாகியுள்ளார்.

நுவரெலியா, சாந்திபுரம் பகுதியைச் சேர்ந்த குறித்த இளைஞன், கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் ரொட்டி போடும் வேலைக்காக வந்து சேர்ந்துள்ளார். தினமும் அதிகாலையில் எழுந்து ரொட்டி போடும் வசதிக்காக கடை உரிமையாளர், நம்பிக்கையின் பேரில் ஹோட்டல் திறப்பை அவரிடம் கொடுப்பது வழக்கம்.

இந்நிலையில், குறித்த இளைஞன், சம்பவத் தினத்தன்று நள்ளிரவு 2 மணியளவில் லாச்சியை உடைத்து தனது அடையாள அட்டையையும் சிகரட் கடை ஊழியர்களுக்கு வழங்குவதற்காக வைத்திருந்த சம்பளப் பணம் இரண்டரை இலட்சம் ரூபாயும் கையடக்கத்தொலைபேசியையும் திருடிக்கொண்டு தலைமறைவகியுள்ளார்.

இது தொடர்பில், ஹோட்டல் உரிமையாளர் திருகோணமலை தலைமை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -