பதினெரு இலட்சம் ரூபாய் பண மோசடி செய்த நெல் வியாபாரி சிக்கினார்..!

எப்.முபாரக் -
தினெரு இலட்சம் ரூபாய் பணத்தினை மோசடி செய்த வியாபாரி ஒருவரை இம்மாதம் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் ருவான் திஸாநாயக்க வியாழக்கிழமை (21) உத்தரவிட்டார்.  
பொலன்னறுவை, பன்சலகொடல்ல, உலகட்டுவ, பகுதியைச் சேர்ந்த ஹேரத் முதியான்சலாகே சுரேஸ்குமார ஹேரத் வயது (32) என்பவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

குறித்த சந்தேக நபர் கந்தளாய் பிரதேசத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவரிடம் நெல் வியாபாரம் செய்து வந்த நிலையில் பதினெரு இலட்சம் ரூபாவினை மோசடி செய்து விட்டு தலைமரைவாக இருந்த நிலையில் கந்தளாயிலுள்ள நெல் வியாபாரி கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் குறித்த சந்தேக நபருக்கெதிராக செய்த முறைப்பாட்டையடுத்து பொலிஸார் புதன்கிழமை (20) கைது செய்து பொலிஸார் சந்தேக நபரை கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். 

இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -