நிந்தவூர் கமு/இமாம் றூமி வித்தியாலயத்தின் 2016ம் ஆண்டுக்கு முதலாம் ஆண்டில் சேர்ந்திருக்கும் புதிய மாணவர்களை வரவேற்கும் 'வித்தியாரம்ப நிகழ்வும், கல்முனை வலயக் கல்வி அதிகாரி எம்.எஸ்.அப்துல் ஜலீலைக் கௌரவிக்கும் நிகழ்வும்' மிகக் கோலாகலமாக வித்தியாலயத்தின் கேட்போர் கூடத்தில் இன்று இடம் பெற்றது.
வித்தியாலய அதிபர் அல்ஹாஜ்.ஏ.சீ.ஹாமீது தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வுகளில் கல்முனை வலயக் கல்வி அதிகாரி எம்.எஸ்.அப்துல் ஜலீல் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பி;த்தார்.
மேலும் இந்நிகழ்வுகளில் நிந்தவூர் கோட்டக் கல்வி அதிகாரி எஸ்.எல்.எம்.சலீம், நிந்தவூர் பிரதேச சபை முன்னாள் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹீர், அல்-அஷ்றக் தேசியக் கல்லூரியின் முன்னாள் அதிபர் ஐ.எல்.லத்தீப், நிந்தவூர் மத்தியஸ்தர் சபை தலைவி ஹாஜியானி திருமதி.பல்கீஸ் மஜீட், ஆசிரிய ஆலோசகர் திருமதி. நஜிமுன்னிஸா இப்றாகீம் ஆகியோரும், பெற்றோர்களும், மாணவர்களும், ஆசிரிய ஆசிரியைகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
அதிதிகள் அனைவராலும் புதிய மாணவர்கள் மாலையிட்டு வரவேற்கப்பட்டதுடன் மணலில் விரல் கொண்டு தமிழில் முதல் எழுத்தை எழுதிப் பழகினர்.இறுதியில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் அவர்களின் கல்விச் சேவையைப் பாராட்டி அதிபர் ஏ.சீ.ஹாமிது அவர்களினால் பொன்னாடை போற்றி, நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.







