அனுமதியின்றி மீன்பிடித்த 29 இந்திய மீனவர்கள் விளக்கமறியலில்..!

எப்.முபாரக்-
னுமதியின்றி இலங்கையின் திருகோணமலை கடற்பரப்பில் மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்திய மீனவர்கள் 29 பேரையும் எதிர்வரும் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் ரி.சரவணராசா வெள்ளிக்கிழமை (1) உத்தரவிட்டார். 

திருகோணமலை கடற்பரப்பில் கடந்த புதன் கிழமை(30) மீன் பிடித்துக்கொண்டிருந்த இருபத்தொன்பது இந்திய மீனவர்களை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு தமிழக மீனவர்களை திருகோணமலை துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைத்தார்கள். 

துறைமுக பொலிஸார் தமிழக இந்திய மீனவர்களை திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

29மீனவர்களும் தமிழ்நாட்டின் காரைக்கால்,தூத்துக்குடி,நாகப்பட்ணம் போன்ற பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர்.

ஏற்கனவே பல இந்திய மீனவர்கள் இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள நிலையிலேயே இவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -