பொ.த.சாதாரண தர பரீட்சை எழுதும் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற இறைவனை பிரார்த்திப்பதாக A.C.Yahiyakhan Srilanka Muslim Congress High Command member and treasurer Ampara தெரிவித்துள்ளார்.
க.பொ.த.சாதாரண தர மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து அவர் விடுத்த ஊடக அறிக்கையில் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பதினொரு வருட பாடசாலை கல்வியின் பின்னர் தோற்றும் தேசிய பரீட்சையில் சிறந்த பெறுபேற்றினை மாணவர்கள் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். பரீட்சைக்குத் தயார்படுத்திய அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் ஆகியோரின் எதிர்பார்ப்புக்களை வெற்றி கொள்ளும் வகையில் மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெறுவார்கள் என நான் நம்புகின்றேன்.
பாடசாலைகளில் கல்வி கற்று பரீட்சைக்குத் தோற்றும் தமிழ், முஸ்லிம் மாணவர்களுக்கு எனது விஷேட வாழ்த்தினைத் தெரிவிக்கின்றேன். மாணவர்களின் வளர்ச்சியில் கண்ணிமை போல காத்து வரும் பெற்றோரின் எதிர்பார்ப்புக்களை மாணவர்கள் பூர்த்தி செய்து, தனது குடும்பத்திற்கும் பிரதேசத்திற்கும் பெருமை தேடித்தரவேண்டும் என இச்சந்தர்ப்பத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன். இவர்களின் சிறந்த அடைவு நாட்டின் அபிவிருத்திக்கு வகிபங்காற்றும் என நான் நம்புகின்றேன் என்றும் அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
