'உதிரம் கொடுப்போம் உயிர் காப்போம்' மருதமுனையில் இரத்ததான நிகழ்வு..!

பி.எம்.எம்.ஏ.காதர்,காமிஸ் கலீஸ்-
ருதமுனை அல்;மனார் மத்திய கல்லூரியன் பழயை மாணவர்களின் 'அல்மனாரியன் 95' அமைப்பின் எற்பாட்டில் 'உதிரம் கொடுப்போம் உயிர்காப்போம்' என்ற தொனிப் பொருளில் இரத்தான நிகழ்வு நேற்று(05-12-2015) மருதமுனை அல்மனார் மத்திய கல்லூரி ஆரம்பப்பிரிவு மண்பத்தில் நடைபெற்றது.

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கியின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் என்.ரமேஷ் தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது. டொக்டர் என்.ரமேஷ் இங்கு இரத்ததான நிகழ்வை ஆரம்பித்து வைத்து உரையாற்றுகையில் இரத்ததானம் என்பது இன,மத.பேதங்களுக்கு அப்பாற்பட்ட சேவையாகும்.

இரத்தத்தின் மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன இரத்தம் தானம் செய்வதன் மூலம் யாருக்கும் எந்தப்பாதிப்பும் ஏற்படுவதில்லை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இரத்தம் கொடுப்பதால் நன்மையே உண்டு எனவே இரத்தம் தானம் செய்வதற்கு யாரும் அஞ்சத்தேவையில்லை. 

ஓருவர் வழங்குகின்ற இரத்தம் மூன்று பெருக்கு பயன்படுத்தப்படுகின்றது; ஆகவே இரத்தம் வழங்கத்தகுதியானவர்கள் முன்வந்து இரத்தம் தானம் செய்து உயிர்களை காப்பாற்ற முன்வர வேண்டும் என்றார். 

இந்த நிகழ்வில் டொக்டர் எம்.எஸ்.நஸ்ரின் ஜௌன் உள்ளீட்ட தாதி உத்தியோகத்தர்கள் சுகாதார உதவியாளர்கள் மற்றும் அமைப்பின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

இந்த இரத்ததான நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இரத்ததானம் செய்தார்கள்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -