கிழக்கு மாகாணத்தின் உணவு செயற்றிட்டம் தொடர்பான கலந்துரையாடல்..!

கௌரவ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் தேசிய உணவு உற்பத்தி செயற்திட்டத்தின் மூலம் நேற்று ( 14.12.2015 ) நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு மாகாணங்களும் எடுத்து வரும் திட்டத்தின் மூலம் மத்திய அரசாங்கத்துடன் இணைந்து நாட்டின் வறுமை ஒழிப்பு பட்டினி போன்ற நிலைமையினை மாற்றி சிறந்த முன்மாதிரியான மாகாணமாக மாற்றும் முயற்சியில் இன்று கிழக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் கிழக்கு மாகாண மூன்று மாவட்ட அரசாங்க அதிபர்களின் பங்கேற்புடன் இவ் அமர்வு இடம்பெற்றது .

இவ் அமர்வின் நோக்கமாக கிழக்கு மாகாண மக்களின் வாழ்வில் நல்லதோர் விடிவினை பெற்றுக் கொடுத்து கிழக்கு மாகாண விவசாய துறையில் நவீன திட்டங்களை அறிமுகம் செய்து உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்ற மாகாணமாக மாற்றப்பட வேண்டும் என்பதும் கிழக்கு மாகாண மக்கள் பெரும்பாலும் விவசாயதுறையினை தமது ஜீவனோபாய தொழிலாக மேற்கொள்வதால் இத்துறையில் பாரிய உதவிகளை மேற்கொள்வது எங்களது தலையாய கடமையாக உள்ளதால் இத்திட்டத்துக்கு இம்மாகாண முதலமைச்சர் என்ற வகையில் தன்னாலான சகலவிதமான உதவிகளையும் உதவிகளையும் செய்யவுள்ளதாக குறிப்பிட்டார். 

இவ் நிகழ்வுக்கு கிழக்கு மாகாண விவசாய , கால் நடை உற்பத்தி, மீன்பிடி அமைச்சர், உணவு வளங்கள் மற்றும் கூட்டுறவு அமைச்சர் துரைரட்னசிங்கம், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் சரத் அபேகுணவர்த்தன மற்றும் அமைச்சின் செயலாளர்கள் , திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
எப்.முபாரக்-




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -