எப்.முபாரக்-
அனுமதிப்பத்திரமின்றி மூன்று மாடுகளை கொண்டு சென்ற இருவரை இம்மாதம் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் ருவன் திஸாநாயக்க ஞாயிற்றுக்கிழமை (13) உத்தரவிட்டுள்ளார்.
வான்எல பகுதியிலிருந்து கந்தளாயிக்கு மூன்று மாடுகளை அனுமதிப்பத்திரமின்றி கொண்டு சென்ற போதே கந்தளாய் பொலிஸார் இருபதாம் கட்டைப்பகுதியில் வைத்து பொலிஸார் சனிக்கிழமை (12) இரவு கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேக நபர்கள் இருவரையும் கந்தளாய் பொலிஸார் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போது விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
