சவூதியில் விவாகரத்து பெற்ற பெண்களுக்கு புதிய சட்டம்..!

வூதி அரேபியாவில், விவாகரத்து பெற்ற பெண்களும் கைம்பெண்களும், உறவுக்கார ஆண் ஒருவரின் அங்கீகாரம் பெறாமல் தமது விவகாரங்களில் தாமே முடிவெடுக்க அனுமதியளிப்பது பற்றி, சவுதி அரேபியா திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது.

தனித்து வாழும் இத்தகைய பெண்களுக்கு, முதற் தடவையாக இதற்கான அடையாள அட்டை வழங்க உள்துறை அமைச்சு ஆலோசித்து வருவதாகவும், சவூதி ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதனால், பள்ளிக்கூடங்களில் பிள்ளைகளை பதிவு செய்வது, மருத்துவ சிகிச்சைகளுக்கான ஒப்புதல் அளிப்பது போன்ற விடயங்களை அவர்கள் சுயமாக செய்வதற்கு இயலும்.

ஆழமான பழமைவாத இஸ்லாமிய சமுகத்தில், குடும்பத்தின் பெண்கள் மீது குடும்பத்து ஆண்கள் வைத்திருக்க கூடிய சட்டப்பூர்வ பிடியை, இந்த புதிய முன்னெடுப்பு தளர்த்தி விடும் என்று, ஆய்வாளர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -