தங்க இடமும் உண்ண உணவு வேண்டுமா..? இதை முதலில் படிங்க

சென்னை நுங்கம்பாக்கத்தில் 75 முதல் 100 பேர் தங்கும் இடமும் 1000 பேருக்கு உணவும் தயாராக உள்ளது, உதவிக்கு 7092020207 என்ற எண்ணை தொடர்பு கொள்ளுமாறு கபாலி ரஜினி என்பவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். 

இதே போன்று பலரும் உதவி செய்ய முன் வந்துள்ளனர். கடந்த மாதம் கொட்டித் தீர்த்த மழையால் படாதபாடு பட்ட சென்னை மற்றும் கடலூர் ஆகிய மாவட்டங்கள் தற்போது நேற்று முன்தினம் இரவில் இருந்து பெய்த கனமழையால் மீண்டும் வெள்ளக்காடாகியுள்ளன. 

சென்னையின் புறநகர் பகுதிகளில் வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை ராணுவத்தினர் மீட்டு வருகின்றனர். இந்நிலையில் உதவி தேவைப்படுபவர்களுக்காக சிலர் ட்வீட் செய்துள்ளனர்.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -