பிரதமரின் அதிரடி அறிவிப்பு - அரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு அடித்தது யோகம்

ரச மற்றும் தனியார் ஊழியர்களுக்கு ஒருபோதும் அநீதி இழைக்கப்படமாட்டாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்

தொழிற்சங்கங்களுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் பிரதமர் பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

தமக்குள்ள அதிகாரத்தை நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு மாத்திரமே பயன்படுத்தவுதாகவும் சுய தேவைகளுக்கு அவற்றைப் பயன்படுத்துவதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

அரச மற்றும் தனியார் ஊழியர்களின் உரிமைகள் பறிக்கப்டுவதாகவும் ஓய்வூதியம் இல்லாது செய்யப்படுவதாகவும், ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் என்பன வெவ்றோக பேணப்படும் எனவும் தெரிவித்து ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும் இவை ஒன்றும் இடம்பெறமாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊழியர்களின் நிதியை இதற்குப் பிறகு எவரும் கையாள முடியாத வகையில் முகாமைத்துவம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிடடுள்ளார்.

தன்னால் செய்ய முடியாது என்றால் அதிகாரத்தை கைவிடத் தயார் என பிரதமர் பாராளுமனறத்தில் தெரிவித்துள்ளார்.

2016 இல் இணைத்துக்கொள்ளப்படுகின்ற அரச ஊழியர்களுக்கு அவர்களின் ஓய்வூதிய திட்டம் செயற்படுத்தப்பட்டே நியமனம் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

2005 ஆம் ஆண்டுக்குப் பின்னர் அரச ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டம் உரிய முறையில் பேணப்படாமல் அரசாங்கம் பிரசித்தி பெற்றுக்கொள்வதற்காக நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளமையால் அவை குறித்து கவனம் செலுத்தப்படும் என்பதோடு அவர்களின் ஓய்வூதியம் குறித்தும் கவனம் செலுத்தப்படும் என பிரதமர் தெரிவித்தார்.

நிதியுடன் கூடிய ஓய்வூதியம் வழங்குவதற்கான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாககவும் அது குறித்து தோழிற்சங்கங்களுடன் பேச்சுவார்த்தை நடாத்துவதாகவும் பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அரச ஊழியரகளுக்கு வழங்கப்பட்டுள்ள வாழ்வாதார கொடுப்பனவை அடிப்படை சம்பளத்துடன் இணைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கபடும் எனவும் 2016 ஜனவரி முதல் 2000 ரூபா சேர்த்துக்கொள்ளப்படும் எனவும் ஏனையவை தவணை முறையில் சேர்ப்பதற்கு நடவடிக்கை ஏட்க்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

சம்பள நிலுவை தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்காக தேசிய சம்பள ஆணைக்குழு உருவாக்கப்படும எனவும் பிரதமர் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தனியார் துறை ஊழியர்களுக்கு 5 நாள் வேலை மற்றும் 2500 சம்பள உயர்வு என்பன உரிய மறையில் முன்னெடுக்கப்படும் என்பதோடு தொழிற்சங்கங்களும் நிறுவுனர்களும் கலந்துரையாடி தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.

எதிர்வரும் காலங்களில் தனியார் துறை ஊழியர்களுக்கு வாழ்வாதரக் கொடுப்பனவு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜனவரி மாதத்தில் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் வழங்கப்பட்ட சலுகைகள் மற்றும் 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வழங்கப்பட்டுள்ள சலுகைகள் என்பவற்றை பிரதமர் மீண்டும் நினைவு கூர்ந்தார்.

வாகனங்களின் கட்டணங்கள் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகளை தீர்ப்பதற்கு தற்காலிக ரீதியில் சில தீர்வுகளை முன்வைப்பதாக பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட அடிப்படையில் வாகன அனுமதிப் பத்திரக் கட்டணத்தை 25 வீதத்திலிருந்து 15 வீதம் வரை குறைகப்பதாகவும் புகைப பரிசொதனைக்காக 1500 ரூபா இடைக்கால கொடுப்பனவாக வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

வாகன மதீப்பீட்டுக் கட்டணம் 5000 ரூபாவாகவும் மோட்டார் சைக்கில் மற்றும் முச்சக்கரண வண்டிகளுக்கான மதிப்பீட்டுக் கட்டணங்களை 3000 ரூபா வரை குறைப்பதற்கும் தீர்மானித்திருப்பதாக பிரதமர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -