பி.எம்.எம்.ஏ.காதர்-
மூத்த அரசியல்வாதியும்,கல்முனை மாநகர சபையின் முன்னாள் மேயருமான செனட்டர் எஸ்.இஸட்.எம்.மசூர் மௌலானாவின் ஜனாஸா நல்லடக்கம் இன்று காலை (05-12-2015) மருதமுனை மையவாடியில் இடம்பெற்றது.
அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி சிரேஷ்ட விரிவுரையாளர் அஷ்சேய்க் எப்.எம்.அஹமதுல் அன்ஸார் மௌலானா விஷேட உரையாற்றினார்.
இதில் அரசியல் பிரமுகர்கள் உள்ளீட்ட பெரும் தொகையானோர் கலந்து கொண்டனர்.மசூர் மௌலானா வெள்ளிக்கிழமை காலை கொழும்பின் மரணமானார்.இவரது ஜனாஸா அம்பியுலன்ஸ் மூலம் கொண்டுவரபட்டு இவரது சொந்த ஊரான மருதமுனையில் நல்லடக்கம் செய்யப்பட்டது.





