காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலய 85 வது ஆண்டு நிறைவு விழா..!

ஏ.எல்.டீன்பைரூஸ்-
காத்தான்குடி மத்திய மஹா வித்தியாலய (தேசிய பாடசாலை) இன் 85 வது ஆண்டு நிறைவு விழாவின் நிகழ்வுகள் அண்மையில் காத்தான்குடி ஹிஸ்புல்லா மண்டபத்தில் மிக விமர்சையாக கெப்டன் யூ.எல்.எம்.முபாறக் தலைமையில் இடம்பெற்றது பிரதம அதிதியாக மீழ் குடியேற்ற புணர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கலந்து கொண்டார். 

காத்தான்குடி வரலாற்றில் 85 ஆண்டுகள் சிறந்த ஓர் கல்விக் கூடமாக இயங்கி பல அயிரக்கணக்கான கல்விமான்களை, சாதனையாளர்களை உருவாக்கி தனக்கென ஒரு இடத்தினை பிடித்துக் கொண்ட காத்தான்கடி மத்திய மஹா வித்தியாலயத்தின் (தேசிய பாடசாலை) இன் சாதனைகளை வார்த்தைகளால் வரைந்து விட முடியாது. 

ஒரு பாடசலையின் சிறப்பான செயல்பாடுகளுக்கு ஆசிரியர்கள், மாணவர்கள், பாடசாலை அபிவிருத்தி குழு, பெற்றோர் சமூகம் என்பவற்றுடன் ஆளுமையுள்ள ஒரு அதிபரின் பணி என்பது மிகவும் அவசியமாகும் அந்த வகையில் காத்தான்கடி மத்திய மஹா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) அதிபராக கடந்த ஐந்து ஆண்டுகளாக பணியாற்றிய கெப்டன் யூ.எல்.எம்.முபாறக் அவர்களின் மகத்தான பண்pயினை காத்தான்கடி சமூகம் என்றும் மறவா என்பது தின்னம்.

காத்தான்குடி மத்திய கல்லூரி கல்வியில் முன்னேற்றம் கண்டுவருவதினை இட்டு தான மகிழ்ச்சி அடைவதாக மீழ் குடியேற்ற புணர்வாழ்வு இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் 

அந்த வகையில் இப்பாடசாலையின் அதிபர் யூ.எல்.எம்.முபாறக் சேர் அவர்கள் தனது பணியினை ஐந்து ஆண்டுகள் சகலரின் ஒத்துழைப்புடன் சிறப்பாக செய்து தனது பணியினை நிறைவு செய்துள்ளார்.

ஒரு பாடசாலையில் கல்வி மேம்பாடு மட்டுமல்ல ஒழுக்கததை நடைமுறை படுத்தல் என்பது ஒரு கஷ்டமான விடயம் ஆனால் அதனை கூ;ட மிகவும் சிறப்பாக தனது பணியினை செய்து முடித்துள்ளார்.

நான் கல்வி கற்ற பாடசாலை இப்பாடசாலை எனவே இப்பாடசாலைக்காக எம்மால் முடிந்த அளவு உதவியுள்ளோம். சுமார் 159 மாணவர்கள் தங்கி படிக்க கூடிய ஒரு விடுதியை பல இலட்சக்கணக்கான ரூபாய் செலவில் கட்டி அது தற்போது முடியும் தருவாயில் உள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா தெரிவித்தார்.

இப்பாடசாலையில் முன்னேற்றத்ததில் அதிபர்,பிரதி அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் உதவி உள்ளனர நாங்களும் எதிர்காலங்களில் உதவுவோம் சுமார் 1400 மாணவர்கள் இருந்து கல்வி கற்க கூடிய ஒரு ஆராதனை மண்டபம் ஒன்றினை கட்டுவதற்காக சுமார் 49 மில்லியன் ரூபாயினை ஒதுக்கி உள்ளதாக தெரிவித்தார்.

அரசாங்கம்,கலிவி அமைச்சு என்பவற்றை மாத்திரம் நாம் நம்பி ஒரு பாடசாலை இருக்க முடியாது பாடசாலை சமூகம்,பொற்றோர். உதவினால்தான பாடசாலை முன்னேற முடியும்.

அதிபர் முபாறக் அவர்களின் சிந்தனையின் பேரினில் கல்லூரியின் 85 வது ஆண்டு நிறைவு விழாவினை முன்னிட்டு கால்பந்தாட்டம் ,கிரக்கட,மரதன் உட்பட பல்வேறு நிகழ்வுகள் ஏலவே இடம் பெற்றதன் பேரினில் அவர்களுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டதுடன் இன்றைய விழாவின் போது 'காத்தளம' என்ற நூல் ஒன்றும வெளியடப்படது.

பாடசாலை கலாச்சார குழுவின் ஏற்பாட்டினில் 85 வது ஆண்டு விழா தொடர்பில் ஏற்பாடு செய்த போட்டியில் பங்குபற்றியவர்களுக்கு அதிதியினால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் என்;னீயஸ் எனும் விஞ்ஞான நூல் ஒன்றும் வெளிடப்பட்டது.

அத்துடன் நூலுக்காக ஆக்கங்களை எழுதியவர்கள், கல்வி மான்களுக்கும் நினைவுப்பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -