2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் கல்முனை மாநகரசபையில் நிறைவேற்றம்..!

எம்.வை.அமீர்-
ன்றுடன் ஆட்சிக்காலம் நிறைவடையும் என எதிர்பார்க்கப்பட்ட கல்முனை மாநகரசபையின் ஆட்சிக்காலம் ஏனைய சில மாநகரசபையுடன் சேர்த்து இன்னும் ஆறு மாதங்களுக்கு நீடிக்கப்பட்டுள்ள இவ்வேளையில் 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம், 2015-12-31 ஆம் திகதி கல்முனை முதல்வர் சட்டமுதுமானி நிஸாம் காரியப்பர் தலைமையில் கூடிய போது சபையில் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டு விவாதத்தின் பின்னர் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

கல்முனை மாநகரசபையின் 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட அறிக்கையின் பிரகாரம் மொத்த சபை நிதி வருமானமாக 73876000.00 ரூபாயும் சபை மூலதன மீண்டுவரும் செலவீனமாக 52359606.00 ரூபாயும் சபை நிதி மூலதன செலவீனம் 21500000.00 ரூபாயும், மிகை 16394.00 ம் ஆக குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல்வரால் வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்பட்டபோது விவாதத்தை எதிர்க்கட்சி சார்பில் அதன் தலைவர் கே.ஏகாம்பரம் விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றினார் பின்னர் உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் தங்களது கருத்துக்களை முன்வைத்து உரையாற்றினர். இறுதியாக பிரதி முதல்வர் ஏ.எல்.ஏ.மஜீட் உரையாற்றினார். பின்னர் 2016ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை ஏகமனதாக நிறைவேற்றுவதாக தீர்மானிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -