சவுதி அரேபியா பணிப்பெண் விடுவிக்க 1 இலட்சம் கை எழுத்து வேட்டை..!

அஷ்ரப் ஏ சமத்-
லங்கைச் சேர்ந்த பெண்னை கல் எறிந்து கொள்ளும் மரணத்தண்டனையை நிறைவேற்றும் வரை சவுதி அராபியாவில் சிறையில் கொஞ்சம் கொஞ்சமாக செத்துக் கொணடிருக்கின்றாள் 

இன்று (8) நேற்றும் (7) வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் முன்பாக மனித உரிமை ஆர்வலா்கள் ஏற்பாட்டில் 1 இலட்சம் கைஎழுத்து வேட்டை இடம் பெற்று வருகின்றது. 

நளினி இரட்னராஜா - மனித உரிமை செயற்பாட்டு சுயாதின ஆர்வலா் இங்கு கருத்து தெரிவிக்கையில் -

மத்திய கிழக்கு நாடுகளில் உழைக்கும் எமது சகோதர சகோதரிகள் தாய்மாா்கள் தந்தைமாா்கள் வருடந்தோறும் எமது நாட்டிற்கு பெருமளவு பணத்தை அனுப்புகின்றமை நீங்கள் அனைவருக்கும் தெரிந்த விடயம் .

2014ஆம் ஆண்டில் மட்டும் அந்த தொகையானது 07 பில்லியன் அமேரிக்க டொலா்கள் ஆகும்.

மனித உரிமை ஆர்வலா்கள் சாா்பாக அருட் சகோதரா் சக்தி வேல் கருத்து தெரிவிக்கையில் -

கல் எறிந்த கொல்லப்பட உள்ள தயை மீட்டெடுக்க தீா்க்கமான நடவடிக்கை எடுககுமாறும் மத்திய கிழக்கு நாடுகளில் சிறைக் கூடங்களிலும் வீட்டு காவலிலும் ,வைத்தியசாலைகளிலும் உள்ள அனைவரையும் பற்றியும் தேடி தேவையான நடவடிக்கை மேற்கொள்ளுவோம். 

மத்திய கிழக்கு நாடுகளுக்கு போக தயாராகும் அனைவருக்கும் அங்கு போக முன்பு அந்த நாடு பற்றிய உண்மையான நிலைமைகளையும் சட்டத்தையும் பற்றியும் ஒரு தெளிவான அறிவை வழங்குதல். கட்டாயமாக்குமாறும் 

குறிப்பிட்ட நாடுகளின் இலங்கை துாதுவர்களுக்கும் ஏனைய உத்தியோகத்தா்களுக்கு ஊழியா்களுக்காக ஆற்ற வேண்டிய பொறுப்புக்களை பற்றியும் கடமைகளையும் பற்றியும் உரிய அறிவை வழங்குமாறும். கொளரவத்தையும் பாதுகாப்பையும் வழங்குதல் என்பது அவா்களுக்கான பணியின் அடிப்படையான வியடமாகும். என்பதை தெரிவித்தாா்.

நீங்கள் போக தயாரக உள்ள நாட்டின் சட்டத்தை பற்றியும் அந்த நாட்டின் சமுக சமய மற்றும் கலாசார நிலைமையை பற்றியும் ஒரு சரியான புரிதல் தங்களிடம் உள்ளதா? தெரியாத நாட்டில் மொழியும் தெரியாமல் இருக்கும் நீங்கள் ஒரு அவசரமான சா்ந்தா்பத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி நினைத்தீா்களா? எமது நாட்டு துாதுவரலாயத்தில் இருந்து உடனடி உதவி கிடைக்கும் என்று நம்புவீா்களா ?

அந்த நாடுகளின் சட்டமும் ஓழுங்கும் பற்றி சரியானதொரு புரிதல் இல்லாத காரணமாக உதவியின்றி தனிமைப்பட்டு சிறைச்சாலைகளிலும் முகாம்களிலும் உள்ளவா்கள் பொறுப்புக் கூறதான் வேண்டும்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -