சுலைமான் றாபி-
கடந்த 205.11.03ம் திகதி முதல் செயற்படும் வண்ணம் மூன்றாம் நிலை தொழிற்கல்வி ஆணைக்குழுவினால் (TVEC) நிந்தவூர் மாவட்ட தொழில்பயிற்சி நிலையத்திற்கு NVQ V (ICT) அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
2013ம் ஆண்டு முதல் இவ்வனுமதிக்கான பல போராட்டங்கள் நடைபெற்ற போதும் இன்றே இக்கனவு நனவாகியுள்ளது.
இதன் மூலம் NVQ IV in ICT பூர்த்தி செய்த மாணவர்கள் NVQ V பாடநெறியினைத் தொடர முடியும்.
ஒரு வருட கால பாடநெறியான இதனை பூர்த்தி செய்வதன் மூலம் நேரடியாக HND In ICT இன் தரத்திற்கும், Degree In ICT தரத்திற்கும் முறையான பயிற்சி மூலம் பயிலுனர்கள் செல்ல முடியும்.
இதேவேளை NVQ தரத்தோடு நின்றுவிடாது அடுத்த கட்ட நடவடிக்கையாக ISO தரச்சாண்றிதழையும் பெறும் வேலைத்திட்டங்களையும் அதற்கான நுட்பங்களையும் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளோம் என நிந்தவூர் மாவட்ட தொழில்பயிற்சி நிலையத்தின் உதவிப்பணிப்பாளர் ஏ. கணகசுந்தரம் தெரிவித்தார்.
