நிந்தவூர் மதீனாவில் சிறப்பான வாசிப்பு மாதக் கொண்டாட்டங்கள் - கல்விப் பணிப்பாளர் சலீம் பிரதம அதிதி

எல்.ஏ.றபீக் பிர்தௌஸ்-

நிந்தவூர் கமு/அல்-மதீனா மகா வித்தியாலயத்தில் சிறப்பான முறையில் வாசிப்பு மாதக் கொண்டாட்டங்கள் ஆசிரியர்களின் வழிகாட்டலில், மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டது.

கல்லூரி பிரதி அதிபர் எம்.எச்.எம்.அப்துல் பதியூ தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வுகளில் கோட்டக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எல்.எம்.சலீம், கல்லூரி முதல்வர் எஸ்.அஹமது ஆகியோர் அதிதிகளாகக் கலந்து கொண்டனர்.

பாடசாலை மைதானத்தைச் சுற்றியுள்ள மரங்கள் யாவும் காற்றடைத்த பந்துகளால் அலங்கரிக்கப்பட்டு, வாசிப்புக் கொட்டகைகள், திறந்த வெளி நூலகம் என்பன அமைத்து சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -