இலங்கையின் பொலிஸ் துறையில் இடம்பெற்ற அசிங்கமான சம்பவம் ஒன்று குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் தற்போது விசாரணைகள், இடம்பெற்று வருகின்றன என்று பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எஸ் ஐ என்று கூறப்படும் உதவி பரிசோதகர் ஒருவர் மற்றும் ஒரு உதவி பரிசோதகரின் முகத்தில் சிறுநீர் கழித்து பழிதீர்த்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கிராண்ட்பாஸ் பொலிஸ் நிலையத்திற்கு அண்மையில் நியமிக்கப்பட்ட உதவி பொலிஸ் பரிசோதகர் ஒருவரை அங்கு பல ஆண்டுகளாக சேவையாற்றும் உதவி பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தொடர்ந்தும் தொந்தரவுக்கு உட்படுத்தி வந்துள்ளார்.
இதன் ஒரு உச்சகட்டமாக அவர் புதிய நியமனத்துக்கான உதவி பொலிஸ் பரிசோதகர் நித்திரையில் இருக்கும் போது அவரின் முகத்தில் சிறுநீர் கழித்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று பொலிஸ்துறையில் பேசப்படும் அசிங்கமான சம்பவமாக மாறியுள்ளது.