ஸ்ரீலங்கா மீடியா போரம் நடாத்தும் இரண்டு நாள் ஊடகக் கருத்தரங்கு பொலன்னறுவை கதுருவெல முஸ்லிம் மத்திய கல்லூரியில் இம்மாதம் 20 மற்றும் 21ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இம்மாவட்டத்தில் தமிழ் மொழி மூல ஊடகவியலாளர்கள் இல்லாமையைக் கருத்திற் கொண்டு பொலன்னறுவை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்துடன் இணைந்து மீடியா போரம் இரு நாள் பயிற்சி முகாமொன்றை 20ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடாத்தவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் ஏற்கனவே கோரப்பட்டுள்ளன.
அதேவேளை, பொலன்னறுவை மாவட்டப் பாடசாலைகளில் கல்வி பயிலும் தமிழ், முஸ்லிம் உயர் வகுப்பு மாணவர்களுக்கான ஊடகக் கருத்தரங்கு 21ஆம் நூற்றாண்டில் ஊடகம் எனும் தலைப்பின் கீழ் 21ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீன் தலைமையில் நடைபெறும் இக்கருத்தரங்கில், ஊடகவியற்துறை சிரேஷ்ட வளவாளர்கள், விரிவுரைகளையும், செயமலர்வுகளையும் நிகழ்த்துவார்கள்.
