எப்.முபாரக்-
இராணுவத்திலிருந்து தப்பியோடி வந்த ஒருவர் திருகோணமலை மொறவெவ பகுதியில் நண்பர் ஒருவரின் வீட்டுக்கு வந்து சந்தேகத்துக்கு கிடமான முறையில் அடையாள அட்டைகள் இன்றி நடமாடிய ஒருவரை இம்மாதம் 27ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் புதன்கிழமை (18) உத்தரவிட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர் இராணுவத்திலிருந்து அனுமதியின்றி தப்பியோடி வந்ததாகவும் மதுபானம் அருந்தி தவறான நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் மொறவெவ பொலிஸார் தெரிவிக்கின்றனர். சந்தேக நபர் ரம்புக்கனை பகுதியைச் சேர்ந்த 39 வயதுடையவர் எனவும், மக்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் செவ்வாய் கிழமை(17) இரவு கைது செய்துள்ளதாகவும் சந்தேக நபரை திருகோணமலை நீதிமன்றத்தில் பொலிஸார் ஆஜர் படுத்திய போது விளக்கமறியலில் வைக்குமாறு நீதிபதி ரி.சரவணராஜா உத்தரவிட்டார்.
இச்சம்பவம் பற்றிய மேலதிக. விசாரணைகளை மொறவெவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றார்கள்.
