பாரிஸ் தாக்குதல் சம்பவத்திற்கு பின்னர் அமெரிக்காவில் பல பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டிருப்பதோடு முஸ்லிம்களை இலக்கு வைத்து குற்றச்செயல்களும் இடம்பெற்றுள்ளன.
ஏற்கனவே சிரிய அகதிகளை ஏற்க அமெரிக்காவின் பல மாநிலங்களும் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. சிவில் உரிமை அமைப்பான அமெரிக்க இஸ்லாமிய உறவுகள் தொடர்பான கவுன்ஸில் (கைர்) வெளியிட்டி ருக்கும் அறிவிப்பில், மஸ்ஸசுட்ஸ், டெக்சாஸ், கண்டக்கி உட்பட பல மாநிலங்களிலும் முஸ்லிம்களுக்கு எதிரான அச்சுறுத்தல் மற்றும் தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றி ருப்பதாக குறிப்பிட்டுள்ளது.
நபரஸ்காவில் இருக்கும் பள்ளிவாசல் சுவரில் ஈபில் கோபுரத்தின் படம் கிறுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கடந்த திங்கட்கிழமை டெக்ஸாஸ் உள்ளுர் பள்ளி வாசலுக்கு அதிகாலை தொழுகைக்கு வந்தவர்கள் அங்கு பள்ளிவாசல் கதவில் மலம் பூசப்பட்டு, அல் குர்ஆன் பிரதிகள் வாயிலில் கிழித்து போடப்பட்டிருப்பதை கண்டுள்ளனர்.
பாரிஸ் தாக்குதல் இடம்பெற்ற ஒருசில மணி நேரத் திற்குள் பிளோரிடாவின் பீட்ஸ்பேர்க் பள்ளிவாசலுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் தொலைபேசி அழைப்பொன்று வந்துள்ளது. அந்த அழைப்பில், பள்ளிவாசல் தரைமட்ட மாக்கப்பட்டு அங்கு யார் இருந்தாலும் தலையில் சுடப் படும் என்று அச்சுறுத்தப்பட்டுள்ளது.
கைர் அமைப்பின் தகவல்படி, பிளொரிடாவில் இருக்கும் மற்றொரு பள்ளிவாசலுக்கும் அதேபோன்ற அச்சுறுத்தல் வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. பள்ளிவாசலுக்கு குண்டு வைத்து அங்கிருப்பவர்கள் சுடப்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. போர்லான்ட், ஒரோகன் பிரதேசங்களில் இருக்கும் பள்ளிவாசலுக்கு வெளியில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றி ருப்பதோடு, பள்ளிவாசலுக்கு தொழச் செல்பவர்களுக்கு எதிராக, கோழைகள், நரகத்திற்கு போவீர்கள் என்று கூச்சலிட்டுள்ளனர்.
வடக்கு கரோலினாவில் வாடகைக் கார் ஓட்டுனர் ஒருவர் முஸ்லிம் என நினைத்து பயணி ஒருவரால் தாக்கப்பட்டுள்ளார். பிளோரி டாவில் இருக்கும் முஸ்லிம் குடும்பம் ஒன்றின் வீட்டுக்கு இனந்தெரியாதோர் துப்பாக்கிச் சூடு நடத்தி இருப்பதாக உள்ளுர் செய்திகள் தெரி விக்கின்றனர். இவர்கள் தமது மத நம்பிக்கை காரண மாகவே தாக்கப்பட்டிருப்பதாக அந்த செய்திகள் குறிப்பிடுகின்றன.
அமெரிக்காவில் குறைந்தது 27 மாநிலங்கள் சிரிய அகதிகளை ஏற்பதில்லை என்று அறி விப்பை வெளியிட்டதை அடுத்தே அங்கு முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகளும் அதிகரித்ததாக கைர் குறிப்பிட்டுள்ளது.
