செய்தியாளர்கள்: ஹாசிப் யாஸீன்,வாஜித்-
இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபனத்தின் நேத்ரா தொலைக்காட்சியில் இன்று இரவு (20)வெளிக்கிழமை 10 மணிக்கு இடம்பெறவுள்ள 'வெளிச்சம்' நிகழ்ச்சியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைசருமான றிஷாட் பதியுதீன் மற்றும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான சட்டத்தரணிஎச்.எம்.எம்.ஹரீஸ் பங்கேற்கவுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் தற்கால அரசியல் நடப்பு விவகாரங்கள், அரசியல் யாப்பு திருத்தத்தினால் முஸ்லிம்களுக்கு ஏற்படக்கூடிய சவால்கள, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிமுறைமை ஒழிப்பினால் சிறுபான்மையினருக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்கள், இன்றையநல்லாட்சி அரசாங்கமும், முஸ்லிம்களும் என பல்வேறு அரசியல் விவகாரங்கள் பற்றிவிவாதிக்கப்படவுள்ளது.
